இறந்த பின்பும் 7 பேருக்கு வாழ்வளித்த 8 வயது சிறுமி வெண்பா

 
sir

இறந்த பின்பும் 7 பேருக்கு வாழ்வளித்த 8 வயது சிறுமி வெண்பாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் குழுத் தலைவர் மற்றும் 73வது வார்டு கவுன்சிலர்) மற்றும்  சுகன்யா தம்பதியின் மகள் வெண்பா(8). கடந்த பிப்.23 உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக வெண்பா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டாலும், இன்று பிப்.25 வெண்பா மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தந்தை சந்தோஷ் மற்றும் தாய் சுகன்யா தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.  

வெண்பாவின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோலை அகற்றி தானமாக வழங்கினர். அகற்றப்பட்ட உறுப்புகளில் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் தனியார்  மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு வெண்பாவின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு புதிய வாழ்வை அளித்துள்ளது.