சென்னையில் சீறிப் பாய்ந்த 8 சொகுசுக் கார்கள் : மடக்கிப் பிடித்த போலீஸ்..

 
சென்னையில் சீறிப் பாய்ந்த சொகுசுக் கார்கள் : மடக்கிப் பிடித்த போலீஸ்..

சென்னை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்களை போலீசார்  மடக்கிப் பிடித்த போலீஸார் அபராதம் வசூல் செய்துள்ளனர்

சென்னையில் சீறிப் பாய்ந்த சொகுசுக் கார்கள் : மடக்கிப் பிடித்த போலீஸ்..

மெரினா காமராஜர் சாலையில் இன்று காலை வரிசையாக 8  சொகுசு கார்கள் வேகமாகவும்,  அதிக ஒலி எழுப்பியையும் சென்றதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறிறைக்கு  தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து எச்சரிக்கை அடைந்த போக்குவரத்து காவலர்கள் நேப்பியார் பாலம் அருகே வந்த எட்டு கார்களையும் மடக்கிப் பிடித்தனர். இந்த கார்கள் ஒவ்வொன்றும் தலா  5 முதல் 8 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள ஃபெராரி, லாம்போர்கினி, கோஷ்  போன்ற விலையுயர்ந்த சொகுசுக் கார்களாகும்.  இந்த கார்களை சோதனை செய்ததில் அவை முறையற்ற நம்பர் பிளேட்டுகளுடன் இயங்குவது தெரிய வந்தது.

சென்னையில் சீறிப் பாய்ந்த சொகுசுக் கார்கள் : மடக்கிப் பிடித்த போலீஸ்..

ஒவ்வொரு கார்களுக்கும்  2,500 ரூபாய் அபராதம் விதித்த காவல் துறையினர்,  நம்பர் பிளேட்டுகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும்,   போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சொகுசு காரங்களுக்கு நம்பர் பிளேட் மாற்றம் பணியில் காரின் உரிமையாளர்கள் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில் சொகுசு கார்களில் இருந்தவர்கள் மகாராஷ்டிரா,  புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள் என்றும்,  சென்னையில் தனியார் சொகுசு கார் பராமரிப்பு நிறுவனத்தில் தொடக்க விழாவில் பங்கேற்க வந்ததும் தெரியவந்தது. இதனிடையே சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்களை கவனித்த இளைஞர்கள், பொதுமக்கள்  சிலர் அந்தக் கார்களின் அருகே நின்று  செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.