#BREAKING தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 
police

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் தேர்தல் பணி இல்லாத பணியிடங்களில் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் முன்னாள் எம்பி கண்ணன், சென்னை காவல்துறை நல்வாழ்வு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை முன்னாள் எஸ்பி பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் முன்னாள் எஸ்.பி.ஜோஷ் ட்தங்கையா, சென்னை பெருநகர காவல் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பிக்கள் சண்முகம், அனிதா ராஜாராம், மாதவன் ஆகியோருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சண்முகம் கியூ பிரிவு எஸ்பியாகவும், ராஜாராஜம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி எஸ்பியாக ஜி.எஸ்.மாதவனும், காவல்துறை நவீனமயமாக்கல் உதவி ஐஜியாக அனுதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.