தமிழ்நாட்டில் இனி 8 மணிநேர மின் தடை
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின்தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் நிலையில், ஆங்காங்கே மின் தடை நிலவுகிறது. இதனால் தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மின்சார சேவைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மின்சார வாரியத்தின் புதிய வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 94987 94987 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு “Hi" என அனுப்பி மின்தடை உள்ளிட்ட புகார்களைப் பதிவு செய்யலாம் எனதமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, பராமரிப்புப் பணி என்ற பெயரில் மின்தடையை 8 மணி நேரம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு அலுவலகங்களில் தடை இன்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

