#BREAKING உண்டியல் திருட்டு- கோவை கோனியம்மன் கோயில் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

 
ரமேஷ்

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு புகார் எதிரொலியாக 8 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15-ஆம் தேதி கோவை கோனியம்மன் கோயிலில்  நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது திருட்டு நடைபெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் 4 கோயில் ஊழியர்கள், 2 சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக உயர் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.