வகுப்பறையில் மயங்கி விழுந்து 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

 
Tirupur

பல்லடம் அருகே அரசு பள்ளியில் படித்து வந்த 7-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மகள் நிதர்சனா (12). பொங்கலூர் காட்டூர் அரசு பள்ளியில் 7 வகுப்பு பயின்று வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் போலீசார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

Tirupur

உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவி நிதர்சனா ரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மாணவி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.