அப்துல் கலாம் நினைவுதினம் - தினகரன், சீமான் ட்வீட்!!

 
tn

‘கனவு காணுங்கள்.. உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்’ என்று ஒரு தலைமுறையினரைத் தட்டி எழுப்பிய தலைவராக வாழ்ந்தவர் அப்துல் கலாம். நமது நாட்டின் உன்னதமான தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.  1931 ஆம் ஆண்டு  அக்டோபர் 15  ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார் அப்துல்கலாம்.  ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கிய  அப்துல் கலாமின் வாழ்க்கை பயணம் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவ உயரிய பதவியில் அரியணை ஏறும்படியாக  மாறியது. 

tn

2015 ஆம் ஆண்டு  ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை நேர்த்தியானது, உண்மையான உழைப்புடன் அர்ப்பணிப்பும் கூடியது என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கும் படிப்பினையாக விளங்குகிறது.

tn

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இளைய சமுதாயத்தினரிடம் புது எழுச்சியையும், நம்பிக்கையையும் விதைத்த ஏவுகணை நாயகர், முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற வல்லரசு நாடாக நம் தேசம் உருவாக வேண்டும் என்ற கலாம் அவர்களின் கனவை நனவாக்க உழைத்திடுவோம் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! நமது ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!" என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.