ஆகஸ்ட் 7-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
சேலம்

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது "கோட்டை பெரிய மாரியம்மன்" என்று அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 31 பணி நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.