பேரதிர்ச்சி! தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள், சென்னையில் 10 லட்சம் பேர் நீக்கம்?
தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.41 கோடி ஆகும். இதில் 1ம் தேதி வரை 6.36 கோடி கணக்கீடு படிவங்கள் விநியோகம் செயப்பட்டுள்ளன. இதில், டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி 5.18 கோடி கணக்கீடு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 25.72 லட்சம் பேர், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் 8.95 லட்சம் பேர், நிரந்தரமாக இடம் பெயார்ந்தவர்கள் 39.27 லட்சம் பேர், Already enrolled 3.32 லட்சம் பேர், பிற காரணங்கள் 24 ஆயிரம் பேர் என மொத்தம் 77.52 லட்சம் பேர் நீக்கம் செய்ய வாய்ப்பு என கணக்கீடு படிவங்கள் பெற முடியாதற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 39.05 லட்சம் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 1ம் தேதி 56 சதவீத கணக்கீடு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் 1.49 லட்சம் பேர், கண்டறிய முடியாதவர்கள் 36 ஆயிரம் பேர், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்தவர்கள் ( Already Enrolled) 10.4 லட்சம் பேர் என மொத்தம் 26 சதவீதம் வாக்காளர்கள் பெயர் வரைவு வாக்காளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 27.87 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த டிசம்பர் 1ம் தேதி வரை 18.34 லட்சம் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 1 லட்சம் பேர், கண்டறியபட முடியாதவர்கள் 1.31 லட்சம் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 2.70 லட்சம் பேர் என மொத்தம் 5.31 லட்சம் (19%) வாக்களர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்பு. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3.89 லட்சம் வாக்காளர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.30 லட்சம் வாக்களர்களும், வேலூர் மாவட்டத்தில் 2.18 லட்சம் வாக்காளர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.6 லட்சம் வாக்களர்களும், தருமபுரி மாவட்டத்தில் 85 ஆயிரம் வாக்களர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.58 லட்சம் வாக்காளர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 1.70 லட்சம் வாக்காளர்களும், சேலம் மாவட்டத்தில் 2 லட்சம் வாக்காளர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1.58 லட்சம் வாக்காளர்களும், ஈரோடு மாவட்டத்தில் 2.80 லட்சம் வாக்காளர்களும், நீலகிரி மாவட்டத்தில் 39 ஆயிரம் வாக்காளர்களும், கோவை மாவட்டத்தில் 2.56 லட்சம் வாக்காளர்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 3 லட்சம் வாக்காளர்களும், கரூர் மாவட்டத்தில் 46 ஆயிரம் வாக்காளர்களும், திருச்சி மாவட்டத்தில் 3.51 லட்சம் வாக்காளர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் வாக்காளர்களும், கடலூர் மாவட்டத்தில் 2.43 லட்சம் வாக்காளர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்பு.
அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 ஆயிரம் வாக்காளர்களும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் வாக்காளர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.84 லட்சம் வாக்காளர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.27 லட்சம் வாக்காளர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 1.39 லட்சம் வாக்காளர்களும், மதுரை மாவட்டத்தில் 3.81 லட்சம் வாக்காளர்களும், தேனி மாவட்டத்தில் 1.26 லட்சம் வாக்காளர்களும், விருதுநகர் மாவட்டத்தில் 1.68 லட்சம் வாக்காளர்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 96 ஆயிரம் வாக்காளர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1.51 லட்சம் வாக்காளர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2.35 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட வாய்ப்பு. அதே போல், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.63 லட்சம் வாக்காளர்களும், அரியலூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் வாக்காளர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 2.88 லட்சம் வாக்காளர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 ஆயிரம் வாக்காளர்களும், தென்காசி மாவட்டத்தில் 1.56 லட்சம் வாக்காளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5.31 லட்சம் வாக்காளர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1.16 லட்சம் வாக்காளர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.45 லட்சம் வாக்காளர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 77 ஆயிரம் வாக்காளர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


