இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது - கமல் ஹாசன் வாழ்த்து!!

 
kamal

நாட்டின் 75ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தேசிய கொடியினை ஏற்றி ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார்.

National Flag

இந்நிலையில் நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது. 


இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.