731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

 
tnpsc

கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  இத்தேர்வுக்கு டிசம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

துறை :  தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு  
பணியின் பெயர்  :  கால்நடை உதவி மருத்துவர்
காலிப்பணியிடங்கள் :  731
விண்ணப்பிக்க கடைசி நாள்  :  டிசம்பர் 17, 2022

doctors
முக்கிய தினங்கள்  : 
   இணைய வழியில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் டிசம்பர் 24ம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பத்தில்  திருத்தம் செய்யலாம்.
தேர்வு நடைபெறும் நாள்  : மார்ச் 15, 2023 ( கணினி வழியில்  காலை 9.30 மணி -   பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு , பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.)
தேர்வு நடைபெறும் முறை  :   பகுதி ‘அ’வில் கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வு (10ம் வகுப்பு தரம்), பகுதி ‘ஆ’ பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடைபெறும்.

Computer base Exam

மேலும்,  கணினி வழித்தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு நடக்கிறது. அந்த மாதமே கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க, http://www.tnpsc.gov.in, http://www.tnpscexams.inஅதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று பார்க்கவேண்டும்..