வகுப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 7- ஆம் வகுப்பு மாணவி

 
Death

ஆந்திர மாநிலம் நெல்லூரில் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவியை ஆசிரியர் கேள்வி கேட்டிருந்த நிலையில் பதில் சொல்லிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30-year-old woman falls to death from 5th floor in Bandra | Cities News,The  Indian Express

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், விஞ்சமுரு  உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து  மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷேக் சஜிதா வகுப்பறையில் ஆசிரியர் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மாணவிகள் பதில்களை கூறி வந்த ஷேக் சுஜிதாவும் பதில் கூறி கொண்டிருந்தபோதே  ​​​​திடீரென  கண்கள் மேலே பார்த்தப்படி மயங்கி சுருண்டு விழுந்தார். 

ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக  குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள்   பரிசோதனை செய்தபோது  அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.  இந்த துயரச் செய்தியைக் கேட்டு, குடும்பத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.