72வது தேசிய திரைப்பட விருதுகள் : சிறந்த தமிழ் திரைப்படம் ராயன், அமரன் படத்துக்கு 3 தேசிய விருது..!

 
1

 

 

  • அமரன் திரைப்படத்திற்கு சிறந்த பிண்ணனி இசைக்கான தேசிய விருது. ‘அமரன்’ படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இயக்குநர் துஷார் ஹிராந்தானியின் ஸ்ரீகாந்த் படத்துக்கு சிறந்த இந்தி படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு
  • புஷ்பா 2 படத்திற்காக ஷீத்தலுக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிப்பு
  • சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருது பெற்றார் லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கீ அட்லூரி
  • கேப்டன் மில்லர் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிப்பு..கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு மற்றொரு விருது அறிவிக்கப்பட்டுள்ளது சமூக மற்றும் தேசிய நலனுக்காக எடுக்கப்படும் திரைப்படம் பிரிவில் அறிவிப்பு
  • சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது தனுஷ் இயக்கிய ராயன் படத்திற்கு அறிவிப்பு
  • ‘மெய்யழகன்’ படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு
  • மகாராஜா படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிப்பு
  • மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது தேசிய விருது பிரம்மயுகம் திரைப்படத்திற்காக
  • சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பிரம்மயுகம் படத்துக்கு அறிவிப்பு
  • வீர சாவர்க்கர் படமான சுதந்திர வீரசாவர்க்கர் திரைப்படத்தின் இயக்குனர் ரந்தீப் ஹூடா விற்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருது
  • அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெறுகிறார் ராஜ்குமார் பெரியசாமி
  • அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசை, கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்பு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிப்பு
  • சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது புஷ்பா 2 படத்துக்கு அறிவிப்பு
  • ‘மெய்யழகன்' படத்திற்கு சிறந்த Sound Mix (சிறப்பு விருது) தேசிய விருது அறிவிப்பு!
  • சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - கல்கி 2898 ஏ.டி
  • மகாராஜா படத்திற்காக சாச்சனா நமிதாஸுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு
  • நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருது.அமரன் படத்திற்கான சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்-க்கு விருது
    அதேபோல், அமரன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது ராஜ்குமார் பெரியசாமிக்கும்,
    எடிட்டர் கலைவண்ணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதும் அறிவிப்பு
  • Non-Feature படங்கள் பிரிவில் ‘BLUE’ என்ற தமிழ் படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது
  • ஏ.ஆர்.எம் திரைப்படத்தில் வரும் அங்கு வான கோனிலு என்ற பாடலுக்காக வைக்கம் விஜயலஷ்மிக்கு தேசிய விருது அறிவிப்பு
  • சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பிரம்மயுகம் படத்துக்கு அறிவிப்பு
  • அறிமுக இயக்குநர் சுமந்த் பட் இயக்கத்தில், வெளியான ”மித்யா” படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு
  • சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஆர்ட்டிகல் 370 படத்திற்காக யாமி கௌதம்-க்கு அறிவிப்பு
  • சுரேனுக்கு சிறப்பு விருது (ஒலிக்கலவை - மெய்யழகன்)
  • இயக்குநர் ஃபாசில் முகமதுவின் 'பெமினிச்சி பாத்திமா என்ற படத்துக்கு சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருது