ஜொமோட்டோ ஆர்டரில் 72% ரூ.2,000 நோட்டுகள் மாற்றம்!

 
zomato

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

 ₹2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது RBI!

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்னர் ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்வோர், ஆன்லைன்  வாயிலாக பணத்தை செலுத்தாமல் கேஷ் ஆன் டெலிவரியில் உணவு வாங்குகின்றனர். அவ்வாறு கேஷ் ஆன் டெலிவரியில் உணவு வாங்குவோர், 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக ஜொமோட்டோ (Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.100, ரூ.200-க்கு உணவு வாங்குவோர் கூட ரூ.2,000 நோட்டுகளை தருவதால் சில்லரைகளுக்கு ஜொமோட்டோ ஊழியர்கள் அல்லல்பட்டுகொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு ஜொமோட்டோ நிறுவனம் சார்பில் எவ்வித உதவியும் செய்து தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.