முதலமைச்சர் உத்தரவின்படி 717 மதுக்கடைகள் மூடல்
முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்த 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் மதுபான கடைகளை அரசே ஏற்றி நடத்தி வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் வந்த போதிலும் பெண்கள் மத்தியில் அரசே மதுபானங்களை விற்கலாமா என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 6000 கடைகள் வரை இருந்த நிலையில் தற்போது வெறும் 4000 கடைகள் மட்டுமே உள்ளது. இந்த கடைகள் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு கடைகளாக மூடப்பட்டு வந்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் அருகில் இருந்த 717 மதுக்கடைகளும் இன்றுடன் மூடப்பட்டன. ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து இருந்தார். மக்கள் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை முன்னிட்டு எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

