700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!

 
TNGOVT

பேரறிஞர் அண்ணாவின் 113வது  பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

stalin

அண்ணா பிறந்தநாளை ஒட்டி நல்லெண்ணம் மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல், சாதி மோதலில் ஈடுபட்டவர்கள், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn govt

சிறை கைதிகளின் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய 113வது பிறந்த நாள் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று வருகிறது.  அப்போது நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனைகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து,  முன் விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் 
தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.