வீடு புகுந்து 7 வயது சிறுமியை சீரழித்த வாலிபர்

கிருஷ்ணகிரி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பொம்மதாசம்பட்டியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பில் படிக்கும் 7 வயது சிறுமி அவருடைய பாட்டி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சிவராமன் (வயது 35) வீட்டில் நுழைந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைக்கண்ட சிறுமியின் பாட்டி கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிவராமனை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் தப்பி ஓடினார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு சிவராமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்..