"தடுப்பு சுவர் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு" - தினகரன் வேதனை!!

 
ttv

தடுப்பு சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ttv dhinakaran

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூவலைத்தள பக்கத்தில், உதகை அருகே கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

 மேலும் அதே விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.