சாலை விபத்தில் 7 பெண்கள் பலி - திருப்பத்தூர் அருகே சோகம்

 
tb

சாலை விபத்தில் 7 பெண்கள் பலியான சம்பவம் திருப்பத்தூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tb
ஆம்பூர் அடுத்த ஓணான் குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இரண்டு வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவிற்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து  இன்று அதிகாலை அனைவரும் சுற்றுலா முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். 

t

நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற வேன் பஞ்சராகியது.  இதையடுத்து நடுரோட்டில் நிற்கவைக்கப்பட்டது.  அப்போது வேனில்  இருந்தவர்கள் சாலையில் நின்று உள்ளனர்.  இந்த சமயத்தில் சாலையில் வேகமாக வந்த மினி லாரி பஞ்சராக நின்றிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது இதில்  சாலையில் நின்று கொண்டிருந்த ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அத்துடன் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மீட்கப்பட்டவர்கள்  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.