7 பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

 
assembly assembly

8 பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்தியும், உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 38.98 கோடி நிது ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

There is a boarding school in Karikaiyur that works parallel to the private  schools and is appreciated by the villagers | தனியார் பள்ளிகளுக்கு இணையாக  செயல்படும் கரிக்கையூர் உண்டு உறைவிடப் ...

தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டும், பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தொடர்ந்து கல்வி பயில்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் படி கடந்த நிதிநிலை அறிக்கையில் 8 உண்டு உறைவிட பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்தும் விதமாக, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, சேலம் கெங்கவல்லி,  நீலகிரி மாவட்டம் கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஆகிய 7  இடங்களில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1500 மாணவ, மாணவிகள் படிக்கும் இந்த பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தாட்கோ மூலம் மேற்கொள்ள 38.98 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.