மொட்டைப்போட்டு ராகிங் கொடுமை - கோவை பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

 
PSG

மது பருக பணம் தர வலியிறுத்தி பொறியல் தொழில்நுட்ப கல்லூரியில் ஜூனியரை அடித்து துன்புறுத்திய சீனியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அங்கு கடந்த ஆறாம் தேதி இரண்டாம் ஆண்டு மாணவரை (ரூபக் வர்மா), சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டி மது குடிப்பதற்காக பணம் கேட்டதாக தெரிகிறது. இரண்டாம் ஆண்டு மாணவர் மது குடிக்க பணம் தர மறுக்கவே, அவரை அடித்து துன்புறுத்திய சீனியர்கள், அவருக்கு மொட்டை அடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக தெரிகின்றன. இதனால் மனமுடைந்த அந்த இரண்டாம் மாணவர் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்திருக்கின்றார். 

உடனே பீளமேடு காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் சீனியர்கள் மீதான புகாரை தந்து நடவடிக்கைக்கு கோரியிருக்கின்றனர். இதனை அடுத்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி ராகிங் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் மாதவன், மணி ,வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ், சந்தோஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து பீளமேடு காவல் நிலைய முன்பாக மாணவர்கள் குழுமி வருவதால் பரபரப்பாக காணப்படுகின்றன. 

மது குடிக்க பணம் தர மறுத்த ஜூனியரை சீனியர்கள் மொட்டை அடித்து துன்புரித்து அடாவடி அட்டூழியம் செய்த மாணவர்களால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திருக்கின்றன.