அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மது அருந்திவிட்டு பங்கேற்ற 4 வீரர்கள் உட்பட 7 பேர் தகுதி நீக்கம்

 
avaniyapuram

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மது அருந்திவிட்டு பங்கேற்ற 4 வீரர்கள் உட்பட 7 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 1,000 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.   ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. 2ம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 115 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தில் 9 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடத்தில் உள்ளனர்.

Avaniyapuram

இந்நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மது அருந்திவிட்டு பங்கேற்ற 4 வீரர்கள் உட்பட 7 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்ற 4 பேரும், உடற்தகுதி பெறாத 3 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய ஆவணங்கள் இல்லாத 38 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.