#BREAKING அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து - 7 பேர் பலி

 
அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து - 7 பேர் பலி அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து - 7 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பேருந்து ஒன்று கார்கள் மீது மோதியதில் 7 பேர் பலியாகினர். 

கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.