நாங்குநேரி இரட்டைக் கொலைவழக்கில் 7 பேர் அதிரடி கைது

 
ச்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டைக் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு என்ற கிராமத்திற்கு நேற்றிரவு வந்த அந்த கஞ்சா போதை கும்பல், அவ்வழியே இரு சக்கர ஊர்தியில் சென்ற இருவரை அரிவாளால் வெட்டியதுடன், அவர்களின் இரு சக்கர ஊர்தியையும் பறித்துக் கொண்டு பெரும்பத்து கிராமத்திற்கு சென்றது, அங்குள்ள தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பயந்து தப்பி ஓடிய பொதுமக்களை அரிவாளால் வெட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஜான் என்ற மாற்றுத்திறனாளியும், வட இந்தியத்  தொழிலாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து  புளியங்குளம் கிராமத்துக்குச் சென்ற கும்பல் அங்குள்ள மக்களையும் சரமாரியாக வெட்டியுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி அருகே நேற்றிரவு நடந்த இரட்டை கொலை விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட எஸ்பி முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.