தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பத்ம விருதுகள் - தமிழ் மாநில காங்கிரஸ் வாழ்த்து

 
gk

மறைந்த நடிகர், கேப்டன் விஜயகாந்த் உட்பட பத்ம விருதுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

vijayakanth

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பல்வேறு துறையில் சாதனைப்படைத்தவர்களுக்கு 2024 -ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில் போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள், சேவைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அவரவர் சார்ந்த துறையிலே முத்திரைப் பதித்ததற்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

GK Vasan

அந்த வகையில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேரும் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பத்ம விருதுகளின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றிய மறைந்த நடிகர், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பது போற்றுதலுக்குரியது. அவரது கலைப்பணிக்கு மிகச்சிறந்த அங்கீகாரத்தை மத்திய அரசு அளித்திருக்கிறது.  எனவே மத்திய அரசுக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.