கேன்சரை குணப்படுத்த வந்தது ஊசி! ரூ.3,70,000 மட்டுமே...

 
s

நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு, 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய, ரூ.3,70,000 மதிப்பிலான அதிநவீன ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

इंजेक्शन से गई 9 साल की बच्ची की जान. (Photo: Representational )
நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு, 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய, ரூ.3,70,000 மதிப்பிலான அதிநவீன ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல மருந்து நிறுவனமான ரோச் ஃபார்மா இந்தியா,  "டெசென்ட்ரிக்" (Tecentriq) என்ற பெயரில் "அடெசோலிசுமாப்" (Atezolizumab) என்னும் புற்றுநோய் ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஊசி, அதிக நேரம் எடுக்கும் கீமோதெரபி சிகிச்சையை போல் இல்லாமல் வெறும் 7 நிமிடங்களில் செலுத்தப்படும். நோயாளிகள் இந்த ஊசியை குறைந்தது 6 முறையாவது செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நுரையீரல் புற்றுநோய் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் கணிசமான எண்ணிக்கைக்கு இதுவே காரணமாக அமைகிறது. இந்நிலையில் இந்த ஊசி புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கும் வழக்கமான கீமோதெரபியைப் போலல்லாமல், நோயெதிர்ப்பு சிகிச்சையானது, புற்றுநோய் செல்களை மிகவும் திறம்பட அடையாளம் கண்டு எதிர்த்துப் போராடுவதற்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.