7.5% உள் இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த திட்டம் என தகவல்

 
mbbs

MBBS, BDS மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

MBBS, BDS மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்க அரசு திட்டமிட்டுள்ளது. உள் இடஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து ஆராய, புதிய நிபுணர் குழுவை அமைக்க முதல்வர்  விஜய் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக 
சுகாதாரத்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் விஜய் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து NEET தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இதுவரை 7.5% உள் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் அரசுக்கல்லூரிகளில் MBBS, BDS படிப்புகளில் 625 மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கப்படுகிறது. உள் இடஒதுக்கீடு 10% உயர்த்தப்பட்டால், ஆண்டுதோறும் 800-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைவர்.