7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

 
assembly

தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

mkstalin

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக டாக்டர் கே. செந்தில்ராஜ் நீடிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத்  நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் எஸ். வினீத், பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக என். சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.நிதித்துறை முதன்மை செயலாளர்  உதயசந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.