#BREAKING புத்தாண்டு பரிசு- 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு
7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உதயச்சந்திரன் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு தலைமைச் செயலாலர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ. சித்திக்குக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பி.செந்தில்குமார், டிட்கோ (TIDCO) தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா ஆகியோருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், தற்போது மத்திய அரசுப் பணியில் இந்தியத் தலைமை நில அளவையாளராக ) பணியாற்றி வரும் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா ஆகியோரும் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்


