சாலையில் சிதறிய ரூ.7 கோடி - லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள் - ஆந்திராவில் பரபரப்பு!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதுவரை மூன்று கட்டங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக என மூன்று கட்டங்களாக தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நான்காம் கட்ட தேர்தல் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆந்திராவில் நாடாளுமன்றத்திற்கான நான்காம் கட்ட தேர்தல் நான்காம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கரிகாப்பாடு சோதனை சாவடியில் என்டிஆர் மாவட்ட போலீசார் 8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர் . லாரியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தனி ரகசிய அறையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
#JUSTIN ஆந்திராவில் மூட்டை மூட்டையாக சாலையில் சிதறிய ரூ.7 கோடி#AndhraPardesh #Money #Lorry #Police #RoadAccident #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/sqwScpWlA8
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 11, 2024
#JUSTIN ஆந்திராவில் மூட்டை மூட்டையாக சாலையில் சிதறிய ரூ.7 கோடி#AndhraPardesh #Money #Lorry #Police #RoadAccident #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/sqwScpWlA8
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 11, 2024
இந்நிலையில் ஆந்திராவில் மூட்டை மூட்டையாக சாலையில் 7 கோடி ரூபாய் கட்டுகள் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்லா அருகே மினி லாரி மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மினி லாரி கவிழ்ந்த நிலையில் அதிலிருந்த ஏழு கோடி ரூபாய் சாலையில் சிதறின. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.