பாட்டிலுக்கு கூடுதல் விலை வசூல்- ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
Sep 2, 2026, 20:06 IST1788359768173
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக பணம் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 67 பேர் மீது அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்ந்தால் பாரபட்சம் இன்றி நடவடிக்கை என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

