அரசு வேலைக்காக 64.22 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு!

 
tn

தமிழகத்தில்  பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள், அதனை  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் : வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்!

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பக அரசு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 64,22,131 ஆக உள்ளன.

jobs

அவர்களில் 29,80,071 ஆண்கள், 34,41,766 பெண்கள், 294 பேர் 3ம் பாலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வயது வாரியான பதிவு தாரர்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக உள்ளனர்.