திமுக-வில் இணையும் 6000 பேர்.. கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின்..

 
stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வருகை  தருகிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (மார்ச் 11) காலை 10 மணிக்கு புறப்படும்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர், சின்னியம்பாளையத்தில் பிருந்தாவன் ஹாலில் நடைபெறும்,   மாற்றுக் கட்சியினர் 6 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.  அந்த நிகழ்ச்சியில்  அவருடன் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

திமுக-வில் இணையும் 6000 பேர்.. கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின்..

அதனைத் தொடர்ந்து, ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை 4 மணிக்கு கருமத்தம்பட்டியில் நெசவாளர்கள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில்  கலந்துகொள்கிறார்.   பின்னர், இரவு 8 மணியளவில் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, விழா நடைபெற உள்ள இடங்களில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை, தமிழக மின்சாரத்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.