என்.ஐ.ஏ. சோதனை - ரூ.60 லட்சம் பறிமுதல்

 
NIA

தமிழ்நாடு, தெலங்கானாவில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.75 லட்சம் மற்றும் ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

nia

இந்தியா முழுவதும் சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.  தீவிரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.


மொத்தமாக கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும், கடையநல்லூரில் ஒரு இடத்திலும், ஐதரபாத், சைபராபாத்தில் 6 இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில், தமிழ்நாடு, தெலங்கானாவில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.75 லட்சம் மற்றும் ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 18,200 அமெரிக்க டாலர்கள், தீவிரவாதம் தொடர்பான புத்தகம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனையில் அரபு மொழி வகுப்பு எடுப்பதாக கூறி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைக்க பிரசாரம் செய்தது அம்பலமானது.