எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு 60 நாட்கள் நீட்டிப்பு

 
tn govt tn govt

தொழிலாளர் நலத்துறையின் இணையதளத்தில் எடையளவுகளை முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு ஆகஸ்ட் 31, 2024 வரை 60 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

govt

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் இணையதள சேவையில் தற்போது வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துறையின் இணையதளத்தில் எடையளவுகளை  முத்திரையிடும் பணிக்கான கால வரம்பு, ஜூன் 30, 2024-ல் முடிவடைகிறது. இந்நிலையில் மேற்படி கால வரம்பு ஆகஸ்ட் 31, 2024 வரை 60 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

rr

மேற்படி கால நீட்டிப்புக்கு, எவ்வித கால தாமதக் கட்டணம் (Over Due Fees) வசூலிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.