அனுமதியின்றி அத்துமீறி பாஜக கொடி ஏற்றியதாக 60 வழக்குகள் பதிவு; 800 பேர் கைது

 
பாஜக கொடி ஏற்ற முயன்ற 80 போ் கைது

தமிழகம் முழுவதும் மாநகராட்சி அனுமதியின்றி அத்துமீறி பாஜக கொடி ஏற்றியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 800 பாஜகவினர் கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாஜக கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு - பாஜகவினர் சாலை மறியல் -  மாநில துணைத்தலைவர் கைது - bjp state vice president and other bjp officials  arrested in trichy ...

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி சென்னை ஈ.சி.ஆர் சாலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு மாநகராட்சியின் முறையான அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த வண்டியின் மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 100 நாட்கள் தினமும் 100 கொடிக்கம்பங்கள் நட உள்ளதாக  தெரிவித்திருந்தார். 

அதனடிப்படையில் பாஜகவினர் தமிழகம்  முழுவதும் கொடிக்கம்பங்களை நடுவதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் கடிதம் கொடுத்த போது, முறையான மாநகராட்சி அனுமதி இல்லை என்பதால் கொடிக்கம்பம் வைக்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சியின் அனுமதியின்றி அத்துமீறி நேற்று பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாஜக கொடிகளை ஏற்ற முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

BJP protested against the panchayat administration for removing the BJP  flag pole | பாஜக கொடி கம்பத்தை அகற்றிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து  பாஜகவினர் சாலை மறியல்

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி அனுமதியின்றி அத்துமீறி பாஜக கொடி ஏற்றியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 800 நபர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையில் வேப்பேரியில் அத்துமீறி கொடிகளை ஏற்றியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவித்ததாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.