விஷசாராயம் அருந்தி 6 பெண்கள் பலி- குஷ்பு தலைமையில் விசாரணை குழு அமைப்பு

 
Kushboo

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 60 நபர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்து வரும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனயில் 111 பேர், விழுப்புரத்தில் 4 பேர், புதுச்சேரி் ஜிப்மரில் 11 பேர், சேலத்தில் 29 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்களாவார். விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 22 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. அதன்படி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.