தூத்துக்குடி அருகே மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
Sun, 19 Mar 20231679239039156

தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 6 இலங்கை மீனவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 05 - IMUL A 0858 GLE என்ற இலங்கை கப்பலை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
முன்னதாக மீனவர்கள் பிரச்சனைக்கு ஏப்ரல் மாதம் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு விரைவில் கிடைக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.