கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!

 
dengue

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

dengue

 கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சலால்  உயிரிழப்புகள் கூட ஏற்படும். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த  4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இதன் காரணமாக இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சையினை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

tn

இந்நிலையில்  கடலூர் வண்டி பாளையம், மஞ்சக்குப்பம் ,முட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.