மதுரையில் கல்லூரி மாணவியின் தந்தையை தாக்கிய 6 பேர் கைது

 
arrested

மதுரை அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த செந்தில்பாண்டியன் என்பவர் மகள் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மீனாட்சி கலை கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் (3/11/22) செவ்வாய்க்கிழமை மாலை தன் மகளை கல்லூரி முடிந்து அழைத்து வருவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வந்த அமரர் ஊர்தி முன் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் ஒலி எழுப்பியவரே மதுபோதையில் சென்றுள்ளனர்.


இளைஞர்களின் இந்த செயலை பார்த்த கல்லூரி மாணவியின் தந்தை அவர்களிடம் தட்டி கேட்ட நிலையில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மாணவியின் தந்தையை இளைஞர்கள் தாக்கும்  காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து காவல்துறைகினர் தேடி வந்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி  வந்த காட்சியின் அடிப்படையில் ராமமூர்த்தி, சோமா, சிவஞானம், நாகபிரியன், அஜித்குமார், சதீஷ்குமார் ஆகியோரை மதுரை செல்லூர் காவல்துறையினர் 341,308, 506(ii), 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.