திருச்சி பேருந்து நிலைய பகுதியில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்

 
ச்

திருச்சியில் யாசகம் பெறுபவரின் 6 மாத கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி தெப்பக்குளம் அடுத்த கீழ ஆண்டார் வீதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் - கஜலட்சுமி (28). தம்பதியினர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. வாழ்வாதாரத்திற்காக இவர் திருச்சி பஞ்சப்பூர் நிலைய பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கஜலட்சுமி தனது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கஜலட்சுமியிடம் மிகவும் தந்திரமாக பேசி, அன்பு காட்டி, நட்புடன் பழகியுள்ளார். பின்னர், அவரை திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பஸ் நிலையத்தில் இருந்தபோது, கஜலட்சுமி இடம் தந்திரமாக பேசி அவரின் குழந்தையை அந்த பெண் கடத்தி சென்றுள்ளார்.

பேருந்து நிலையம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால், உடனடியாக எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள எடமலைப்பட்டி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர்களின் முதல் கட்ட விசாரணையில் அந்தப் பெண் தஞ்சாவூருக்கு சென்று இருப்பது தெரியவந்தது அதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் விரைந்துள்ளனர்.