எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் 6 எம்எல்ஏக்கள்

 
eps

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதனால் அதிமுக தலைமை மீது ஏற்பட்ண அதிருப்தியால்
 மரகதம் குமரவேல், சத்யபாமா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தவெக பக்கம் சாய்ந்த நிலையில், இன்னும் சிலரையும் வளைக்கத் தவெக திட்டமிட்டுள்ளது.

ஆட்சியில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருந்தால்தான் தொகுதிக்கு தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும் என்ற யதார்த்தத்தை அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்துவிட்டனர். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தனது இருப்பை தக்கவைக்கப் போராடினாலும், அடிமட்டத் தொண்டர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் தவெக பக்கம் ஈர்க்கப்படுவது அதிமுகவின் பிடிமானத்தை தளர்த்தியுள்ளது. ஏற்கனவே எம்எல்ஏக்கள் பலரின் விலகல் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை தந்துள்ள நிலையில், இப்போது மேலும் சில புள்ளிகள் தவெகவில் இணையத் துடிப்பதாக செய்திகள் கசிகின்றன. சோதனையான காலத்தில் கைக்காசை போட்டு செலவு செய்த முன்னாள் அமைச்சர்கள் பலரும், இனி வரும் காலங்களில் அதிகாரமில்லாமல் அதிமுகவில் இருக்கத் தயக்கம் காட்டுகின்றனர். வரும் இடைத்தேர்தல்களில் எப்படியாவது சட்டப்பேரவையில் தனி மெஜாரிட்டியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக அதிமுகவின் கோட்டைகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி, அங்குள்ள முக்கிய தலைவர்களைத் தனது கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தவெக மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது.

அந்தவகையில், கே. சி. வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி , கே. பி. அன்பழகன், சி. வி. சண்முகம், எஸ். பி. வேலுமணி, எஸ். எம். சுகுமார் போன்ற முக்கிய புள்ளிகள். தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை இது சாத்தியமானால், சட்டப்பேரவையில் யாருடைய கூட்டணியையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற வலுவான நிலையை விஜய் அடைந்துவிடுவார். இப்படிப்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு நடுவில், எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான வியூகங்களை வகுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.