சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் - லாரி ஓட்டுநர் கைது!!

 
tn

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும்,  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகளான பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. பிரியாவிற்கு ராஜதுரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று பிரியாவின் பெற்றோர்  மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேர் கொண்டாலம்பட்டி வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில்  உடன்பாடு செய்யப்படாததால் தனது மகளை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி அதிகாலை ஆம்னி வேனில் எட்டு பேரும் பெருந்துறை நோக்கி சென்றுள்ளனர்.

tn

அப்போது சேலம் மாவட்டம் அப்போது சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டர் என்னும் பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியுள்ளது.  இதில் ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் அவர் அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.  மேலும் ஆம்னி வாகனத்தில் பயணம் செய்த செல்வராஜ் ,மஞ்சுளா, ஆறுமுகம், பழனிச்சாமி ,பாப்பாத்தி , பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை சஞ்சனா ஆகியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

arrest

இந்நிலையில்  சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில்  தப்பியோடிய லாரி ஓட்டுநர் ஜெகன்பாபுவை கோவையில் போலீசார் கைது செய்தனர்.   சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு அலட்சியமாக உறங்கியது விசாரணையில் தெரியவந்தது.