தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Nov 16, 2023, 21:30 IST1700150411265
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


