பிரபல நடிகை வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு..!

 
1

 நடிகை சுகன்யா வீடு, சென்னை பெசன்ட் நகர், திருவள்ளுவர் நகரில் உள்ளது. சுகன்யாவின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. சுகன்யா வீட்டில் வேலை செய்யும் தமிழ்ச்செல்வன், அஞ்சலைதேவி ஆகியோர் பாம்பை பார்த்துள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாம்பு, வீட்டின் படுக்கை அறை உள்ளிட்ட இடங்களுக்குள் செல்லத் தொடங்கியது. பாம்பை பார்த்ததும் சுகன்யா அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர், சுகன்யா வீட்டுக்கு சென்று பாம்பை தேடினர். அப்போது, கார் நிறுத்தும் பகுதியில் பதுங்கி இருந்த, 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்தனர். பின், வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராமில்' சுகன்யா வெளியிட்ட பதிவில், 'என் வீட்டின் போர்ட்டிகோ பகுதியில் கருப்பு நிற பாம்பு ஒன்று இருந்தது. 'அந்த பாம்பை பிடித்த, திருவான்மியூர் நிலைய அலுவலர் சண்முகம் உள்ளிட்ட தீயணைப்பு துறையினருக்கும், வீட்டுப் பணியாளர்களான தமிழ்ச்செல்வன், அஞ்சலைதேவிக்கும் நன்றி' என, தெரிவித்துள்ளார்.