இலங்கை கடற்படையால் 6 தமிழக மீனவர்கள் கைது!!

 
fisher

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

fisher

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர்.  கச்சதீவுக்கும் கோடியகரைக்கும் இடைப்பட்ட நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6  மீனவர்களை கைது செய்தனர்.  அத்துடன் அவர்களின் படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களா  அல்லது புதுக்கோட்டை  மாவட்டத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
arrest

ஏற்கனவே தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கை கடற்படை கைதான நிலையில் , மேலும் 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.