தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 
election

தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

election

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று சென்னையில் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் அடிப்படையில் 6. 20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . இதில் 3 கோடியே  4 லட்சம் ஆண்களும்,  3  கோடியே  15 லட்சம் பெண்கள் மற்றும் 8027 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்கியுள்ளனர்.

tn

நவம்பர் 9ம் தேதி வரைவு பட்டியல் வெளியான நிலையில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதியான சென்னை துறைமுகம் தொகுதியில் 1.7 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதில் பெறலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.