59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும்,நிர்வாக வசதிக்காகவும்,பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 59 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் பொறுப்பு தலைமை இயக்குநர் ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.
![]()
இதில் முக்கியமாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப்பு பிரிவு டிஎஸ்பி எஸ்.சுரேஷ் சண்முகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கும், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி சிவகங்கை மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்துக்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி கே.எம். மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மனித உரிமைபிரிவுக்கும்,ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.சுகுமார் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு என 59 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிக்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


