அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு

 
tn

தமிழ்நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டியது.  இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

diwali

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரையும்,  இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.  பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் , தீபாவளி அன்று காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் நீதிமன்றம்  தெரிவித்தது.

வெடி

இந்த சூழலில் சென்னையில் பட்டாசு  வெடித்ததன் காரணமாக காற்றின் தர குறியீடு 200 தாண்டியது. காற்று மாசு படும்போது ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படக்கூடும். இதய நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனால் பாதிப்படைவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகை- சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக  காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.