#BREAKING தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும் போது இந்த நேரத்திற்கு சுமார் 20% அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த முறை கண்டிப்பாக 85% வாக்குப்பதிவு தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் இதுவரை 40% தாண்டவில்லை. வெறும் 36% தான் பதிவாகி உள்ளது.. திருச்சி கிழக்கில் 37% தான் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் ஒரு மணி வரை 39.61% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை காட்டிலும்,17.2 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. பொதுவாக 12 மணி முதல் 3 மணி வரை வாக்க பதிவு மந்தமாக பதிவாகும் நிலையில் இந்த முறை தொடர் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

